கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடாமல் வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது: வாசிம் அக்ரம் கண்டனம் + "||" + In the match against India, Pakistan's failure to fight cannot be accepted: Wasim Akram condemned

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடாமல் வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது: வாசிம் அக்ரம் கண்டனம்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடாமல் வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது: வாசிம் அக்ரம் கண்டனம்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடாமல் வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
கராச்சி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி கண்டதை அடுத்து அந்த அணிக்கு எதிரான கண்டன கணைகள் வலுத்து வருகிறது. பாகிஸ்தான் அணி தோல்விக்கு முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘என்னை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தேர்வு சரியாக இல்லை. உலக கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் அணி சரியான திட்டமிடுதலுடன் சென்றதாக தெரியவில்லை. வெற்றி, தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு அங்கமாகும். ஆனால் இது மாதிரி போராடாமல் தோல்வி கண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.


இதே போல், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக சாடி இருக்கிறார். இது தொடர்பாக யூ டியூப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி செய்த தவறை இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி செய்தது. கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஏன் இந்த அளவுக்கு மூளை இல்லாதவராக செயல்பட்டார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சேசிங்கில் பாகிஸ்தான் அணி சிறப்பானது கிடையாது என்பதை அவர் எப்படி மறந்தார். நமது அணியின் பலம் பந்து வீச்சு தான் என்பது தெரியும். சர்ப்ராஸ் அகமது டாசை வென்றதுமே நாம் பாதி ஆட்டத்தை வென்று விட்டோம். ஆனால் சர்ப்ராஸ் அகமது ஆட்டத்தில் தோற்க கடினமாக முயற்சித்தார். டாஸ் மிகவும் முக்கியமானது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 260 ரன்கள் எடுத்து இருந்தால் கூட அந்த ரன்னுக்குள் எதிரணியை பவுலர்கள் கட்டுப்படுத்தி இருப்பார்கள். சர்ப்ராஸ் அகமதுவின் செயல்பாடு முட்டாள்தனமான கேப்டன்ஷிப்பை காட்டுகிறது. பாகிஸ்தான் அணி கேப்டனின் இதயமில்லாத செயல்பாடு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஹசன் அலி பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. சாதாரணமான பாகிஸ்தான் வீரர்களிடம் இருந்து அசாதாரணமான செயலை நாம் எதிர்பார்த்து இருக்கிறோம். பயிற்சியாளர் மிக்கி ஆர்துர் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் அணியின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.