கிரிக்கெட்

ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை + "||" + Get ready to face the wrath of public back home: Sarfaraz warns teammates

ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை

ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை
நாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மான்செஸ்டர்,

உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முழுவதுமாக சரண் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் வசைபாடி வருகின்றனர்.  

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இணையதள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த பேட்டியில், வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடவிட்டால்,  ரசிகர்களிடம் எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார். 

சர்ப்ராஸ் அகமது கூறும் போது, “ மீதமுள்ள 4 போட்டிகளிலும் இதேபோன்று மோசமாக விளையாடி வந்தால்,  மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள், மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். யாராவது நான் மட்டும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லப் போகிறேன் என நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம். 

அனைவரும்தான் நாட்டுக்குள் செல்லப் போகிறோம் என்பதை மனதில் வையுங்கள். ஏதோ துரதிருஷ்டமாக நடக்கப்போகிறது என்பதால்தான் கடவுள் சில விஷயங்களை தடுத்துள்ளார். மோசமான விளையாட்டை கைவிட்டு, வெற்றி பெற வேண்டும். இந்தியாவுடன் பெற்ற தோல்வியை மறந்து விட்டு சிறப்பாக ஆட வேண்டும்” என்றுதெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்
டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மன நிலையை காட்டுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
2. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை: பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள்
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
4. பாகிஸ்தானில் பரபரப்பு: 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை அடித்து, உதைத்த முதல் மனைவி
பாகிஸ்தானில் 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை முதல் மனைவி அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. ஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.