கிரிக்கெட்

‘மோசமாக ஆடினால் தாயகம் திரும்ப முடியாது’ பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை + "||" + Bad home For Pakistani players Captain Sarfraz Ahmed warns

‘மோசமாக ஆடினால் தாயகம் திரும்ப முடியாது’ பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை

‘மோசமாக ஆடினால் தாயகம் திரும்ப முடியாது’ பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடம் ‘சரண்’ அடைந்ததால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

மான்செஸ்டர், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடம் ‘சரண்’ அடைந்ததால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, சக வீரர்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்து இருக்கிறார். ‘தொடர்ந்து இதே போன்று திறமைக்கும் குறைவாக மோசமாக விளையாடினால், நிச்சயம் தனியாக (பாதுகாப்பின்றி) நாடு திரும்ப முடியாது. மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை மனதில் வைத்து விளையாடுங்கள். கசப்பான அனுபவத்தை மறந்து விட்டு, இனி வரும் ஆட்டங்களில் அணியை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்துங்கள்’ என்று சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.

இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் உலக கோப்பை கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது. எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரைஇறுதியை எட்டுவது கடினம் தான். ஏனெனில் பாகிஸ்தான் அணி ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. இரண்டு 38 வயது வீரர்களை (சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ்) வைத்து கொண்டு உலக கோப்பையை ஒரு போதும் வெல்ல முடியாது. பாகிஸ்தான் அணியை முற்றிலும் சீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைக்கிறேன். சில மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்
தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்.
2. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்: 28 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலியாகியுள்ளனர்.
3. நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை
நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
4. தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி
தனது நாட்டு வான் பரப்பில் பயணிகள் விமானம் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
5. அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்
அமெரிக்க பயணத்தின் போது செலவை குறைக்க பாகிஸ்தான் தூதர் இல்லத்திலேயே தங்குவதற்கு இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.