கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவுட் + "||" + Cricket Records Keep Tumbling! Mali Women Six All Out Vs Rwanda In T20I Tie

கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவுட்

கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல்  அவுட் ;  9 பேர் ரன் எடுக்காமல் அவுட்
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறாக வெறும் 6 ரன்களுக்கு மொத்த அணியும் அவுட்டான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.
மாலி: 

 மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சின்ன நாடான மாலியில் நேற்று  20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மாலி பெண்கள் அணியும், ருவாண்டா பெண்கள் அணியும் இந்த டி 20 போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே மிகவும் வித்தியாசமாக சென்றது. மாலி அணியின் தொடக்க வீராங்கனை மரியம் சமாங்கே மட்டும் அந்த அணியில் ஒரு ரன் எடுத்து அவுட்டானார்.

அதன்பின் களமிறங்கிய மாலி அணி வீராங்கனைகள் எல்லோரும் வரிசையாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். 9.4 ஓவரில் அந்த அணி மொத்தமாக அவுட்டானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த அணி மொத்தமாக எடுத்ததே 6 ரன்கள்தான்.

அதிலும் அந்த அணியில் இருந்து வீராங்கனைகள் 9 பேர் டக் அவுட்டானார்கள். ஒரே ஒரு ரன் மட்டும்தான் ஓடி எடுக்கப்பட்டது. மீதம் உள்ள ரன்கள் எல்லாம் வைட் மூலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எளிதாக ருவாண்டா அணி அடித்து வென்றது. இதன் மூலம் ஐசிசி டி20 பெண்கள் போட்டியில் மாலி அணி புதிய மோசமான சாதனை படைத்து இருக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக சீனா எடுத்திருந்த 14 ரன்கள் ஸ்கோர்தான் மிக குறைவான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
2. கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
3. ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்
ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
4. பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று சஞ்சய் பங்கர் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதா எம்பி கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்து உள்ளார்