கிரிக்கெட்

‘பந்துவீச்சில் சதம் அடித்த பவுலர்’ ரஷித்கானை கிண்டல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் + "||" + Rashid Khan teased Iceland Cricket Board

‘பந்துவீச்சில் சதம் அடித்த பவுலர்’ ரஷித்கானை கிண்டல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்

‘பந்துவீச்சில் சதம் அடித்த பவுலர்’ ரஷித்கானை கிண்டல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 9 ஓவர்களில் 11 சிக்சர் உள்பட 110 ரன்களை வாரி வழங்கினார்.

மான்செஸ்டர், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 9 ஓவர்களில் 11 சிக்சர் உள்பட 110 ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் உலக கோப்பை தொடரில் ஆட்டம் ஒன்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான பவுலர் என்ற அவச்சாதனைக்கு ஆளானார். அவரை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டல் செய்து வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில், ‘ இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானின் முதல் சதத்தை ரஷித்கான் அடித்து விட்டார் என்பதை இப்போது தான் கேள்விப்பட்டோம். வாவ்... 56 பந்துகளில் (9 ஓவர்) 110 ரன்கள். உலக கோப்பையிலோ அல்லது மற்ற போட்டியிலோ அதிக ரன்கள் குவித்த பவுலர் என்ற மகத்தான சாதனையை படைத்து விட்டார். சிறப்பான பேட்டிங் இளம் வீரரே’ என்று வர்ணிக்கப்பட்டு இருந்தது.

ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த டுவிட்டர் பதிவுக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் லுக் ரைட் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இது அபத்தமான பதிவு. உறுப்பு நாடுகளில் இருந்து வந்து கிரிக்கெட்டுக்கு நிறைய பங்களிப்பை அளித்துள்ள அவரை கலாய்ப்பதற்கு பதிலாக உரிய மரியாதையை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையே ரஷித்கான் குறித்த விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் நகைச்சுவையாக இதை பதிவிட்டதாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.