கிரிக்கெட்

சச்சின், லாரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி..! + "||" + Virat Kohli Puts Sachin Tendulkar, Brian Lara's Record Under Threat

சச்சின், லாரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி..!

சச்சின், லாரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி..!
கிரிக்கெட் உலகில் பல வியத்தகு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி, மற்றொரு சாதனையை படைக்க உள்ளார்.
சவுதாம்ப்டன், 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது அசாத்திய பேட்டிங் திறனால் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். நடப்பு உலக கோப்பை தொடரில் இன்னும் சதம் அடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதத்தை எட்டுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகியோரின் சாதனையை விராட் கோலி முறியடிக்க அவருக்கு 104 ரன்களே தேவைப்படுகின்றன. சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் (453 இன்னிங்ஸ்) எட்டிய சாதனையை சச்சின், மற்றும் லாரா ஆகியோர் கூட்டாக வைத்துள்ளனர்.  தற்போது வரை 131 டெஸ்ட், 222 ஒருநாள் போட்டிகள், 62 இருபது ஓவர் போட்டிகள் என 415 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 19,896 ரன்களை குவித்துள்ளார். 

இன்னும் 104 ரன்கள் அடித்தால் குறைந்த இன்னிங்ஸ்களில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வியத்தகு சாதனையை விராட் கோலி படைக்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு?
வங்காளதேச தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில்,கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம் என்று கோலி நம்புகிறேன் என்றார்.
3. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
5. எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை; ரோகித் பற்றி விராட் கோலி பேட்டி
எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என ரோகித் சர்மா பற்றி விராட் கோலி பேட்டியளித்து உள்ளார்.