கிரிக்கெட்

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்துகிறேன் ; பாகிஸ்தான் வீரர் ட்விட்டால் சர்ச்சை + "||" + Pakistan Pacer Hasan Ali Cheers For India to Win World Cup, Deletes Tweet After Backlash

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்துகிறேன் ; பாகிஸ்தான் வீரர் ட்விட்டால் சர்ச்சை

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்துகிறேன் ; பாகிஸ்தான் வீரர் ட்விட்டால் சர்ச்சை
உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வாழ்த்துகிறேன் என்று கூறிய பாகிஸ்தான் வீரரின் ட்விட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப்பின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், உலகக்கோப்பையை வெல்லவும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதைக்கண்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி, உங்கள் விருப்பம் நிறைவேறட்டும். அதற்கு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த ட்விட் பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், ட்விட் போட்ட சில நிமிடங்களிலேயே அதை அவர் நீக்கி விட்டார். இருப்பினும் ஒரு பாகிஸ்தான் வீரராக இருந்து கொண்டு, எப்படி இப்படி சொல்ல முடிகிறது என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்திய அணிக்கெதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஹசன் அலி 89 ஓட்டங்கள் வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.