ஆப்கானிஸ்தான் கேப்டனுடன் மோதலா? ரஷித்கான் பதில்


ஆப்கானிஸ்தான் கேப்டனுடன் மோதலா? ரஷித்கான் பதில்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:00 PM GMT (Updated: 21 Jun 2019 9:24 PM GMT)

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் குல்படின் நைப்புக்கும், பிரதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

லண்டன், 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் குல்படின் நைப்புக்கும், பிரதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை ரஷித்கான் மறுத்துள்ளார். இது குறித்து ரஷித்கான் அளித்த பேட்டியில், ‘எனக்கும், கேப்டன் குல்படினுக்கும் இடையிலான உறவில் எந்த பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால், அஸ்ஹார் ஆப்கன் கேப்டனாக இருந்த போது அவருக்கு அளித்த ஆதரவை விட இப்போது குல்படினுக்கு அதிகமாகவே ஆதரவு அளிக்கிறேன். மேலும் நான் குல்படினுக்காகவோ அல்லது கிரிக்கெட் வாரியத்துக்காகவோ விளையாடவில்லை. தேசத்துக்காக விளையாடுகிறேன். எனது பணி என்ன என்பது தெரியும். அதை தொடர்ந்து செய்வேன்’ என்றார்.

சில மாதங்களுக்கு முன்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஸ்ஹார் ஆப்கனை நீக்கி விட்டு குல்படின் நைப் நியமிக்கப்பட்ட போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ரஷித்கான் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story