கிரிக்கெட்

பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? மலிங்கா விளக்கம் + "||" + "Legend" Lasith Malinga Reveals Stock Ball, Basic Plans Worked Against Ben Stokes

பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? மலிங்கா விளக்கம்

பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? மலிங்கா விளக்கம்
பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லீட்ஸ்,

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில்  ஒன்றாக வலம் வந்த இங்கிலாந்து அணிக்கு இலங்கை நேற்று அதிர்ச்சி அளித்தது.  டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 232 ரன்களை சேர்த்தது. பேட்டிங்கில் அசூர பலத்துடன் காணப்பட்ட இங்கிலாந்து, எளிதாக இந்த ரன்களை சேஸ் செய்து விடும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால்,  இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை பந்து வீச்சாளர்கள், அந்த அணியை 212 ரன்களுக்குள் சுருட்டி  வெற்றியை ருசித்தனர். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பில் இலங்கை அணி இன்னும் நீடிக்கிறது. அதேவேளையில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு அடுத்து வரும் 3 போட்டிகளும் கத்தி மேல் நடப்பது போன்ற நிலை ஆகும். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா,  இந்தியா,  நியூசிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்த 3 அணிகளும் பலம் மிக்க அணிகளாக இருப்பதால் இங்கிலாந்து அவ்வளவு எளிதில் வெற்றி பெற முடியாது.

இங்கிலாந்துடனான போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா கூறியதாவது:- “முக்கியமான பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பிறகு, பென் ஸ்டோக்ஸ் மட்டும் எங்களுக்குக் கடைசி வரை அச்சுறுத்தலாகவே இருந்தார். அவர் எங்களின் பவுலிங்கில் 2, 3 பவுண்டரிகளை அடித்தார். ஆனால், எங்களின் திட்டத்தில் தெளிவாக இருந்தோம். தொடர்ந்து  சரியான லைனில் பந்துகளை அவருக்கு வீசிக் கொண்டே இருந்தோம். கண்டிப்பாக லைனை மிஸ் செய்து அடிக்க ஏதுவான  பந்து போட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதுவே நாங்கள் வெற்றி பெற உதவியது.

இங்கிலாந்தின் இந்த தோல்வி, அந்த அணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. காரணம் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 4-ல் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அடுத்த 3 போட்டிகளை அந்த அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த 3 அணிகளும் மிகவும் வலுவாக இருப்பதனால், இங்கிலாந்தின் அரையிறுதிப் பயணம் அவ்வளவு சுலபமாக இருக்காது. 

அதே நேரத்தில் இலங்கை 6 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், 2 போட்டிகள் கைவிடப்பட்டதால் 6 புள்ளிகளுடன், தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இதனால், அந்த அணியின் அரையிறுதிக் கனவு பலிக்க வாய்ப்புள்ளது.