கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் + "||" + World Cup Cricket; India won the toss and elected to bat

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சவுதம்டன்,

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் சவுதம்டனில் இன்று நடக்கும் 28வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக காணப்படும் இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காத அணிகளில் ஒன்றாகும். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா புரட்டியெடுத்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அது உலக கோப்பை போட்டியில் பெறும் 50வது வெற்றியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற விதம் நியாயமற்றது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.
3. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
4. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதும், சுழற்பந்து வீச்சாளர்கள் சோடை போனதும் புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது.
5. உலக கோப்பை வெற்றி; பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறுவாரா?
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை முதன்முறையாக இங்கிலாந்து வென்ற நிலையில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.