கிரிக்கெட்

டோனியின் யோசனையால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தேன்–‌ஷமி + "||" + By Tony's idea 'Hat-trick' record-Shami

டோனியின் யோசனையால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தேன்–‌ஷமி

டோனியின் யோசனையால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தேன்–‌ஷமி
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் சவுதம்டனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

சவுதம்டன், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் சவுதம்டனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 224 ரன்களே எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் இலக்கை நெருங்கினாலும் கடைசி கட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்ட போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி தொடர்ச்சியாக முகமது நபி (52 ரன்), அப்தாப் ஆலம் (0), முஜீப் ரகுமான் (0) ஆகியோரின விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்ததோடு வெற்றியையும் உறுதி செய்தார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஹாட்ரிக் சாதனை படைத்த இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்ற முகமது ‌ஷமி நிருபர்களிடம் கூறுகையில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது சிறப்பு வாய்ந்தது. அதுவும் உலக கோப்பை போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். கடைசி விக்கெட்டுக்குரிய பந்தை வீசுவதற்கு முன்பாக விக்கெட் கீப்பர் டோனி எனக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பது அரிது. வேறு எந்தவிதமான பந்து வீச்சும் யோசிக்காதே. யார்க்கராக மட்டும் வீசு. இது உனக்குரிய வாய்ப்பு. நிச்சயம் பலன் கிடைக்கும் என்றார். அவர் சொன்னபடியே வீசி ஹாட்ரிக் சாதனை புரிந்தேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி பட்டம் வென்று சாதனை
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது.
2. ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை
உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார்.
3. விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக வென்று ஹாலெப் சாதனை செரீனாவை வீழ்த்தி அசத்தல்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் நேர் செட்டில் செரீனா வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச்சென்றார்.
4. விம்பிள்டன் டென்னிசில் 100–வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.
5. டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி
பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது.