கிரிக்கெட்

டோனி–ஜாதவ் பார்ட்னர்ஷிப் குறித்து தெண்டுல்கர் அதிருப்தி + "||" + Regarding the Tony-Jadhav Partnership Tendulkar dissatisfaction

டோனி–ஜாதவ் பார்ட்னர்ஷிப் குறித்து தெண்டுல்கர் அதிருப்தி

டோனி–ஜாதவ் பார்ட்னர்ஷிப் குறித்து தெண்டுல்கர் அதிருப்தி
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அதை கொண்டு எப்படியோ 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சவுதம்டன், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அதை கொண்டு எப்படியோ 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது:–

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் செயல்பாடு கொஞ்சம் ஏமாற்றத்திற்குரியதாகவே இருந்தது. இதை விட சிறப்பாக ஆடியிருக்கலாம். கேதர் ஜாதவ்–டோனி இடையிலான பார்ட்னர்ஷிப் (5–வது விக்கெட்டுக்கு 84 பந்தில் 57 ரன் எடுத்தனர்) எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவர்களின் ஆட்டம் மந்தமாக இருந்தது. மொத்தம் 34 ஓவர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு நாம் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளோம். இந்த ஒரு பகுதி நமக்கு சவுகரியமாக இருப்பது போல் தெரியவில்லை. விராட் கோலி வெளியேறிய பிறகு 38–வது ஓவரில் இருந்து 45 ஓவர்கள் வரை நாம் போதிய ரன்கள் எடுக்கவில்லை. இதனால் நெருக்கடி ஏற்பட்டது. மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் வேகமாக ஆடியிருக்க வேண்டும்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.