கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு + "||" + World Cup Cricket Afghanistan won the toss and elected to bowl

உலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 31-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து  வங்காளதேச அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இந்த உலக கோப்பையில் புள்ளி கணக்கை தொடங்காத ஒரே அணி ஆப்கானிஸ்தான் தான். குல்படின் நைப் தலைமையிலான அந்த அணி இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது. குறைந்தது ஒரு வெற்றியோடு வெளியேற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ஆப்கானிஸ்தானுக்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும்.