கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசம் நிதான ஆட்டம் + "||" + World Cup Cricket Bangladesh is a steady game

உலக கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசம் நிதான ஆட்டம்

உலக கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசம் நிதான ஆட்டம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி நிதானமாக ஆடி வருகிறது.
சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 31-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டான் தாஸ் மற்றும் தமிம் இக்பால் களமிறங்கினர். இதில் லிட்டான் தாஸ் 16 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் மற்றும் ஷகிப் அல்–ஹசன் அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர். இதில் தமிம் இக்பால் 36 ரன்களில் போல்ட் ஆனார்.

தற்போது வங்காளதேச அணி 29 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 142  ரன்களை எடுத்துள்ளது.

வங்காளதேச அணியில் ஷகிப் அல்–ஹசன்  51  ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.