கிரிக்கெட்

அதிக கேட்ச் விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடத்திலும்... இந்தியா கடைசி இடத்திலும்... + "||" + Pakistan have now dropped 14 catches in this World Cup - the most of any team in the tournament. India have dropped just one catch.

அதிக கேட்ச் விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடத்திலும்... இந்தியா கடைசி இடத்திலும்...

அதிக கேட்ச் விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடத்திலும்... இந்தியா கடைசி இடத்திலும்...
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்ச் விட்ட அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா கடைசி இடத்திலும் இருக்கிறது.
உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.

5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அரையிறுத்திக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நான்காவதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். அடுத்து வரக்கூடிய போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளின் நிலை தெரிய வரும். ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்ரிக்க அணிகளுக்கு இனிமேல் அரையிறுதி வாய்ப்பு இல்லை.

இந்நிலையில், நேற்றுவரை நடந்து முடிந்த 30 போட்டிகளிலும் மோசமான பீல்டிங் என்ற வகையில் அதிக கேட்ச் கோட்டை விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதில்  பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி இதுவரை மொத்தம் கிடைத்த 26 கேட்ச்களில் 14 கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் அடிப்படையில் இது 35 சதவிகிதமாகும். இங்கிலாந்தோ மொத்தம் கிடைத்த 42 கேட்ச்களில் 10 கேட்ச்களை கோட்டை விட்டிருக்கிறது. 

தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இந்திய அணி 15 கேட்ச்களில் ஒன்றை மட்டுமே கோட்டை விட்டுள்ளது. அதனால், பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
2. கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
3. ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்
ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
4. பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று சஞ்சய் பங்கர் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதா எம்பி கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்து உள்ளார்