கிரிக்கெட்

வாசிம் அக்ரம் ஆரூடம் பலிக்குமா? + "||" + Wasim Akram hopes Pakistan can repeat 1992 performance vs New Zealand

வாசிம் அக்ரம் ஆரூடம் பலிக்குமா?

வாசிம் அக்ரம் ஆரூடம் பலிக்குமா?
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆரூடம் பலிக்குமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பர்மிங்காம்,

‘1992-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் ஆடிய நியூசிலாந்து அணி முதல் முறையாக பாகிஸ்தானிடம் மோதிய போது தோற்றது. அதே போல் இந்த உலக கோப்பை போட்டியிலும் நிகழும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆருடம் கூறியுள்ளார். 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் 7 லீக் ஆட்டங்களில் முறையே தோல்வி, வெற்றி, மழையால் முடிவில்லை, தோல்வி, தோல்வி, வெற்றி, வெற்றி (நியூசிலாந்துக்கு எதிராக) என்று முடிவு கண்டது. அதே பாணியில் இந்த உலக கோப்பையிலும் பயணிக்கும் பாகிஸ்தானுக்கு, நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்றும் சுட்டிகாட்டுகிறார்.