கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு + "||" + CWC19 India win the toss, elect to bat first against West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 

இதில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதால் ஒவ்வொரு நாளும் போட்டி மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்களான இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் கோதாவில் குதிக்கின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (நியூசிலாந்துக்கு எதிராக) என்று 9 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறையை உறுதியாகி விடும்.

6 ஆட்டத்தில் வெறும் 3 புள்ளி மட்டுமே எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இப்போது அரைஇறுதி வாய்ப்பு நூலிழை அளவுக்கு தான் ஒட்டிக்கொண்டுள்ளது. அதுவும் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் உயரிய ரன் ரேட்டுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதிரடி சூரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேட்டிங்கில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சில வீரர்களின் ஆட்டங்கள் மட்டுமே ‘கிளிக்’ ஆவதால் வெற்றிப்பாதைக்கு பயணிக்க முடியவில்லை. இன்றைய ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் -இந்திய ராணுவ தலைமை தளபதி
இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார்.
2. வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதல் இந்தியா கவலை
வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்சமாக ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்து உள்ளது.
3. அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானை இந்தியா கண்டித்துள்ளது.
4. இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும்: ‘ரபேல்’ விமானத்தில் அதிநவீன ஏவுகணைகள் - பிரான்ஸ் நிறுவனம் புதிய தகவல்கள்
‘ரபேல்’ விமானத்தில் உள்ள அதிநவீன ஏவுகணைகளால் இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
5. இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: அசத்தும் ரோகித் சர்மா
இந்திய அணி வீரர் ரோகித் சர்மா இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...