கிரிக்கெட்

கூட்டு முயற்சியால் நியூசிலாந்தை வீழ்த்தினோம் -சர்ப்ராஸ் + "||" + By joint venture We beat New Zealand Sarfraz Ahmed

கூட்டு முயற்சியால் நியூசிலாந்தை வீழ்த்தினோம் -சர்ப்ராஸ்

கூட்டு முயற்சியால் நியூசிலாந்தை வீழ்த்தினோம் -சர்ப்ராஸ்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கூட்டு முயற்சியால் நியூசிலாந்தை வீழ்த்தினோம் சர்ப்ராஸ் அகமது கூறினார்.
பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பர்மிங்காமில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 238 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் சதம் (101 ரன்) அடித்தார். வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில் ‘பாகிஸ்தான் அணி நெருக்கடிக்கு தள்ளப்படும் போது எல்லாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த ஆட்டத்திலும் நடந்துள்ளது. அணியின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி இதுவாகும்.பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது’ என்றார்.