கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் அடித்த டோனிக்கு தெண்டுல்கர் பாராட்டு + "||" + Tendulkar praises Dhoni for his half-century against the West Indies

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் அடித்த டோனிக்கு தெண்டுல்கர் பாராட்டு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் அடித்த டோனிக்கு தெண்டுல்கர் பாராட்டு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் அடித்த டோனிக்கு தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை,

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி மந்தமாக ஆடியதை விமர்சித்த முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி அரைசதம் (56 ரன், 61 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து ஆடிய விதத்தை பாராட்டியுள்ளார்.


தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி- ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இல்லாவிட்டால் இந்திய அணியால் 268 ரன்களை எட்டியிருக்க முடியாது. அதிலும் கடைசி ஓவரில் டோனி 2 சிக்சர் உள்பட 16 ரன்கள் விளாசியதை மறந்து விடக்கூடாது. அவரே 6 பந்துகளையும் எதிர்கொண்டு வலுவாக முடித்து வைத்தது சிறப்பானது’ என்று கூறியுள்ளார்.