கிரிக்கெட்

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு + "||" + Australia-New Zealand teams clash today: Pakistan meet Afghanistan in another match

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு
நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்பில் உள்ள நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திக்கின்ன.


உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் லீட்சில் நடக்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. எஞ்சிய 2 ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ள சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானுக்கு இன்றைய ஆட்டம் பெரிய அளவில் கடினமாக இருக்காது. தங்களது ரன்ரேட்டை உயர்த்திக்கொள்ள இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முனைப்பு காட்டுவார்கள்.

இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சு தாக்குதல் மூலம் 224 ரன்னில் கட்டுப்படுத்தியதை பாகிஸ்தான் வீரர்கள் மறந்து விடமாட்டார்கள். அந்த ஆட்டத்தில் இந்தியா பெரும்பாடு பட்டு 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே ஆப்கானிஸ்தானை எந்த வகையிலும் சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வீரர்களை பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

லண்டன் லார்ட்சில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

7 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளியுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டது. வெற்றிப்பயணத்தை நீட்டித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்கும் உத்வேகத்துடன் ஆடுவார்கள். அந்த அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (500 ரன்), டேவிட் வார்னர் (496 ரன்), பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் (19 விக்கெட்) ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களின் செயல்பாட்டை பொறுத்தே அந்த அணியின் வெற்றி தோல்வி அமையும்.

நியூசிலாந்து அணி 5 வெற்றி, ஒரு முடிவில்லை, ஒரு தோல்வி என்று 11 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நியூசிலாந்து அணி, முந்தைய லீக்கில் பாகிஸ்தானிடம் தோற்றது.

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோரின் பேட்டிங் கடந்த சில ஆட்டங்களில் சரியில்லை. அவர்கள் நிலைத்து நின்று ஆடினால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி குறையும். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன், ஆல்-ரவுண்டர்கள் கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி அரைஇறுதியை உறுதி செய்து விடும். ஆனால் அந்த பணி எளிதல்ல என்பதை அறிவார்கள். இரு அணிகளும் ஏறக்குறையை ஒரே மாதிரியான பலத்துடன் காணப்படுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

இவ்விரு அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 136 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 90-ல் ஆஸ்திரேலியாவும், 39-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. 7 ஆட்டத்தில் முடிவில்லை. உலக கோப்பை கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இவ்விரு அணிகளும் 10 ஆட்டங்களில் சந்தித்து அதில் 7-ல் ஆஸ்திரேலியாவும், 3-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 301 ரன்கள் எடுத்துள்ளது.
2. ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று சந்திப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கதாநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
5. உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து சாதிப்பாரா?
உலக பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.