கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : வலுவான நிலையில் இங்கிலாந்து + "||" + World Cup Cricket England in strong position

உலக கோப்பை கிரிக்கெட் : வலுவான நிலையில் இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் : வலுவான நிலையில் இங்கிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் ஆடி வருகிறது.
பர்மிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 38-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இருவரும் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை கவனமாக எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் 57 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோ 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.