கிரிக்கெட்

தங்கள் நாட்டுக்காக விளையாட வருமாறு அம்பத்தி ராயுடுக்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு + "||" + Iceland Cricket Board invites Ambati Rayud to come play for their country

தங்கள் நாட்டுக்காக விளையாட வருமாறு அம்பத்தி ராயுடுக்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு

தங்கள் நாட்டுக்காக விளையாட வருமாறு அம்பத்தி ராயுடுக்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு
தங்கள் நாட்டுக்காக விளையாட வருமாறு, அம்பத்தி ராயுடுக்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது. அதற்கு அம்பத்தி ராயுடு ஏற்கனவே வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகிய போதிலும் மாற்று வீரர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும் அம்பத்தி ராயுடுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காததால் அம்பத்தி ராயுடு அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அம்பத்தி ராயுடுக்கு டுவிட்டர் மூலம் அழைப்பு விடுத்து இருக்கிறது. தங்கள் நாட்டு அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாட வந்தால் அவருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க தயார் என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு வலை விரித்து இருக்கிறது.