கிரிக்கெட்

இரட்டை ஆதாயம் விவகாரம்: தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை டிராவிட் ஏற்பதில் சிக்கல் + "||" + Double gain issue: Dravid has trouble accepting the post of president of the National Cricket Academy

இரட்டை ஆதாயம் விவகாரம்: தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை டிராவிட் ஏற்பதில் சிக்கல்

இரட்டை ஆதாயம் விவகாரம்: தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை டிராவிட் ஏற்பதில் சிக்கல்
இரட்டை ஆதாயம் விவகாரம் தொடர்பாக, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை டிராவிட் ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த 1-ந் தேதி பதவி பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இரட்டை ஆதாயம் பிரச்சினை எழுந்ததால் அவர் இந்த பதவியை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சம்பளம் பெறும் பதவியில் டிராவிட் இருப்பதால் இந்த பிரச்சினை கிளம்பி இருக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை ஏற்க வேண்டுமானால் டிராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வகித்து வரும் பதவியை துறக்க வேண்டியது வரும் என்று தெரிகிறது.