கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு? + "||" + Cricket World Cup semi-final: New Zealand, Pakistan to whom?

உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?

உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டி விட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது. ஆனாலும் நியூசிலாந்துக்கே அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகிறது.


அதாவது பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் வங்காளதேசத்தை நாளை சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும். நியூசிலாந்து அணி ரன்ரேட்டில் (+0.175) வலுவாக இருப்பதால் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாகும்.

அதே சமயம் ரன்ரேட்டில் பின்தங்கியுள்ள (-0.792) பாகிஸ்தான் அணி அரைஇறுதியை எட்டவேண்டும் என்றால் வங்காளதேசத்துக்கு எதிராக இமாலய வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது முதலில் பாகிஸ்தான் அணி ஆடி 400 ரன்கள் எடுத்தால் வங்காளதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். 350 ரன்கள் குவித்தால், வங்காளதேசத்தை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். பாகிஸ்தான் 2-வது பேட்டிங் செய்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது. எனவே, நியூசிலாந்து அரைஇறுதிக்கு தகுதிபெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றே சொல்லாம்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைந்து வருகிறது’ - டிரம்ப் பேட்டி
“இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்து வருகிறது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
2. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
3. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்
இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
4. அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்திக்கிறார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்தித்து பேச உள்ளார்.
5. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.