கிரிக்கெட்

இந்திய அணி அரைஇறுதியில் மோதுவது யாருடன்? + "||" + Indian team With whom does the half end collide

இந்திய அணி அரைஇறுதியில் மோதுவது யாருடன்?

இந்திய அணி அரைஇறுதியில் மோதுவது யாருடன்?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
லண்டன்,

பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி 4-வது இடத்தை பெறும் அணியுடனும், 2-வது இடத்தில் உள்ள அணி, 3-வது இடம் வகிக்கும் அணியுடனும் அரைஇறுதியில் மோத வேண்டும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது 6 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் இலங்கையை நாளை (சனிக்கிழமை) சந்திக்கிறது. இதே போல் தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா (14 புள்ளி) தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதுகிறது. இவ்விரு ஆட்டங்களின் முடிவை பொறுத்தே டாப்-2 இடங்கள் முடிவாகும்.


இந்திய அணி தனது கடைசி லீக்கில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவிடம் ‘சரண்’ அடைந்தால் இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு நகரும். இவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணி அரைஇறுதி ஆட்டத்தில் தற்போது 4-வது இடம் வாய்ப்பில் உள்ள நியூசிலாந்துடன் மோத வேண்டி வரும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சந்திக்கும்.

மாறாக இந்திய அணி இலங்கையிடம் தோற்றால் தற்போதைய நிலைமைப்படி இந்திய அணி 2-வது இடத்திலேயே நீடிக்கும். அப்போது இந்திய அணி 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்துடன் (ஜூலை 11-ந்தேதி) மோத வேண்டும். அனேகமாக இங்கிலாந்தை எதிர்கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது. நடப்பு தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் மட்டுமே தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.