கிரிக்கெட்

ரவி சாஸ்திரியிடம் அறிவுரை கேட்ட டோனி + "||" + ICC World Cup: MS Dhoni turns to 'former spinner' Ravi sastri for advice

ரவி சாஸ்திரியிடம் அறிவுரை கேட்ட டோனி

ரவி சாஸ்திரியிடம் அறிவுரை கேட்ட டோனி
சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது குறித்து ரவி சாஸ்திரியிடம் எம்.எஸ்.தோனி நீண்டநேரம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரரான எம்.எஸ்.டோனி, நடப்பு உலகக்கோப்பை  தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே தோனியின் ஆட்டம் குறித்து சச்சின் உட்பட பலரும் விமர்சனம் கூறி வருகின்றனர்.  குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் டோனி தொடர்ந்து தடுமாறி  வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் ஆல்ரவுண்டருமான ரவி சாஸ்திரியிடம் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது குறித்து டோனி ஆலோசனை கேட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பான, பயிற்சியின் போது  கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் டோனிக்கு சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவி  சாஸ்திரி ஆலோசனை வழங்கி உள்ளார்.

இன்றைய போட்டியில் டோனி மிக சுறுசுறுப்பாக உள்ளது போல் தெரிகிறது.  அவுட்டான 4 பேட்ஸ்மேன்களையும் டோனியாலேயே அவுட் ஆனார்கள். டோனி 3 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் மூலம் அவுட் ஆக்கி உள்ளார்.