கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் யார் ? பாப் டு பிளிஸ்சிஸ் கருத்து + "||" + World Cup Cricket Who's in the finals? du plessis concept

உலக கோப்பை கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் யார் ? பாப் டு பிளிஸ்சிஸ் கருத்து

உலக கோப்பை கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் யார் ? பாப் டு பிளிஸ்சிஸ் கருத்து
உலக கோப்பை கிரிக்கெட்டியில் இறுதிப்போட்டி தொடர்ப்பான தனது கருத்தினை தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில்,  மான்செஸ்டர் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.  

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி  50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களை குவித்தது.  பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 315 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இதனையடுத்து தென்னாப்ரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, பேசிய தென்னாப்ரிக்கா அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்,  நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரும் என நினைக்கிறேன். தொடர்ந்து பேசிய அவர், நியூசிலாந்து அணி கடைசி 3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.  இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாடும் என நினைக்கிறேன். மேலும் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சிறப்பான ஆட்டத்தை ஆடிவருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,  14 புள்ளிகளுடன்  ஆஸ்திரேலிய அணி  இரண்டாவது இடத்திலும் உள்ளது.

எனவே முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதுகிறது.  மான்செஸ்டரில் வரும் செவ்வாய்க்கிழமை (9-ம் தேதி) இப்போட்டி நடக்கிறது.