கிரிக்கெட்

உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக பங்காற்றுகிறேன்-விராட்கோலி + "||" + World Cup match Participate differently — Viratkoli

உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக பங்காற்றுகிறேன்-விராட்கோலி

உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக பங்காற்றுகிறேன்-விராட்கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக பங்காற்றுகிறேன் என பேட்டி அளித்தார்.
மான்செஸ்டர், 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மான்செஸ்டரில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்த உலக கோப்பை போட்டியில் சதம் அடிக்காததை நான் பொருட்படுத்தவில்லை. இந்த உலக கோப்பை போட்டியில் நான் வித்தியாசமான பங்களிப்பை அளித்து வருகிறேன். அணியின் தேவைக்கு தகுந்தபடி எந்த மாதிரியான பங்களிப்பையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ரோகித் சர்மா தொடர்ச்சியாக ரன் குவித்து வருவது சிறப்பானதாகும். அவர் நல்ல தொடக்கம் அளிப்பதால் மிடில் ஆர்டரில் வேறு மாதிரியான பங்களிப்பை அளிக்க வேண்டியது உள்ளது. மிடில் ஆர்டரில் விக்கெட் விழாமல் கட்டுப்படுத்துவதுடன் ஹர்திக், கேதர் ஜாதவ், டோனி போன்ற வீரர்கள் விளையாட நான் துணை நிற்க வேண்டும். ஒரு நாள் போட்டியில் களம் இறங்கும் நேரத்தை பொறுத்து நாம் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். நான் ஒரு புறம் நிலைத்து நிற்க மறுமுனையில் நமது வீரர்கள் ரன் எடுப்பதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிடில் ஓவரில் நிலைத்து நிற்பதன் மூலம் இந்த உலக கோப்பை போட்டியில் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்று இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.