கிரிக்கெட்

பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் 15–ந் தேதி தொடக்கம் + "||" + Cricket match for school teams Beginning in Chennai on the 15th

பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் 15–ந் தேதி தொடக்கம்

பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் 15–ந் தேதி தொடக்கம்
19 வயதுக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கு இடையிலான 2–வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது.

சென்னை, 

19 வயதுக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கு இடையிலான 2–வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி 4 மைதானங்களில் நடக்கிறது. இதில் சென்னையில் இருந்து 14 அணிகளும், கோவை மற்றும் மதுரையில் இருந்து தலா ஒரு அணிகள் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 50 ஓவர்கள் அடிப்படையில் மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி 90 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும். இறுதிப்போட்டி ஆகஸ்டு 7 மற்றும் 8–ந் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த தகவலை போட்டி அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.