கிரிக்கெட்

உலக கோப்பையில் லீக் சுற்றில் வெளியேற்றம்: வங்காளதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நீக்கம் + "||" + Bangladesh Cricket Team Dismissal of the coach

உலக கோப்பையில் லீக் சுற்றில் வெளியேற்றம்: வங்காளதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நீக்கம்

உலக கோப்பையில் லீக் சுற்றில் வெளியேற்றம்: வங்காளதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நீக்கம்
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டன.

டாக்கா, 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் வங்காளதேச அணி லீக் சுற்றில் 9 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 8–வது இடத்தை பெற்றது. இதனால் வங்காளதேச அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ரோட்ஸ்சை (இங்கிலாந்து) வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘ஒப்பந்த காலம் வரை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை நீட்டிக்க நாங்கள் விரும்பவில்லை. நீக்க முடிவு செய்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் கவுரவமாக விலகி கொள்ள சம்மதம் தெரிவித்தார். இந்த மாதம் இறுதியில் நடைபெறும் இலங்கை பயணத்துக்கான வங்காளதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார். இதேபோல் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் கார்ட்னி வால்ஷ் (வெஸ்ட்இண்டீஸ்), சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி (இந்தியா) ஆகியோரின் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ‘கிரிக்கெட்டில் சூதாட்டத்துக்கு வீரர்கள் இடம் அளிக்கக்கூடாது’ - ஷேவாக் வேண்டுகோள்
கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம்
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
3. இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: கங்குலி
இந்தியா -வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.