கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன் + "||" + West Indies Cricket Board Nicholas Booran on the list of contract players

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கு (2019–2020) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

ஜமைக்கா, 

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கு (2019-2020) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எல்லா வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) ஆட்டங்களுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் அல்ஜாரி ஜோசப், கீமோ பால், கெமார் ரோச், டேரன் பிராவோ, ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், ஷாய் ஹோப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் டாவ்ரிச், ஷனோன் கேப்ரியல், ஜோமெல் வாரிகன், கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் ஷெல்டன் காட்ரெல், நிகோலஸ் பூரன், ரோவ்மன் பவெல், ஒஷானே தாமஸ், பாபியன் ஆலென், கார்லஸ் பிராத்வெய்ட் உள்ளிட்டோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். இது தவிர 15 வீராங்கனைகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘கிரிக்கெட்டில் சூதாட்டத்துக்கு வீரர்கள் இடம் அளிக்கக்கூடாது’ - ஷேவாக் வேண்டுகோள்
கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம்
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
3. இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: கங்குலி
இந்தியா -வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.