டோனி எப்போது ஓய்வு? விராட் கோலி வெளியிட்ட முக்கிய தகவல்


டோனி எப்போது ஓய்வு? விராட் கோலி வெளியிட்ட முக்கிய தகவல்
x
தினத்தந்தி 11 July 2019 5:40 AM GMT (Updated: 11 July 2019 5:40 AM GMT)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி ஓய்வு குறித்து தங்களிடம் ஏதும் கூறவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணிக்கு பயத்தை ஏற்படுத்தி வந்தார். மேலும் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.

சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போது, ஆட்டத்தின் 48.2-வது பந்தை டோனி அடித்து ஆட முற்பட்டார். அப்போது இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயன்றார். ஆனால் கப்திலின் அற்புதமான துரோவால் டோனி ரன் அவுட் ஆனார். இந்தநிலையில் டோனி ரன் அவுட் ஆன வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டோனி ரன்அவுட்டாகி வெளியேறும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வெளியேறினார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி இதுகுறித்து கூறுகையில், டோனி அவருடைய ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.


Next Story