கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து + "||" + World Cup Cricket England beat Australia and advance to the final

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பிர்மிங்காம்,  

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது அரையிறுதிப் போட்டி  நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச்  ரன் எதுவும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பின்னர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் 4 ரன்னிலும், ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 

அடுத்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்டீவன் சுமித் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அலெக்ஸ் கேரி 46 ரன்னில் கேட்ச் ஆக, அவரை தொடர்ந்து ஸ்டோனிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும், கம்மின்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அடுத்து வந்த  மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவன் சுமித் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஸ்டீவன் சுமித் 85 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் பெரேன்டோர்ப் 1 ரன்னில் அவுட் ஆனார். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. கடைசியில் நாதன் லயன்  5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், மார்கவுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய் மற்றும்  பேர்ஸ்டோ களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இதில் பேர்ஸ்டோ 34 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஜாசன் ராய் 65 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த ஜோரூட் மற்றும் மோர்கன்  பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி  32.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை ( 226 ரன்கள்) எட்டியது. கடைசியில் ஜோரூட் 49 ரன்களுடனும், மோர்கன் 45  ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில்,  8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மேலும் வருகிற 14-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.