பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்தாப் ஆலத்துக்கு ஒரு ஆண்டு தடை


பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்தாப் ஆலத்துக்கு ஒரு ஆண்டு தடை
x
தினத்தந்தி 11 July 2019 9:30 PM GMT (Updated: 11 July 2019 8:13 PM GMT)

வேகப்பந்து வீச்சாளர் அப்தாப் ஆலம் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு முன்னதாக சவுதம்டனில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கையில் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.

காபுல், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் அப்தாப் ஆலம் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு முன்னதாக சவுதம்டனில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கையில் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தலின் பேரில் ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டு நாடு திரும்பினார். இந்த நிலையில் அப்தாப் ஆலம் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது. இதில் அப்தாப் ஆலம் வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அப்தாப் ஆலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டியில் விளையாட ஒரு ஆண்டு தடை விதித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story