கிரிக்கெட்

இந்திய வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள் + "||" + punjab peoples fire to indian cricket players posters

இந்திய வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்

இந்திய வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த விரக்தியில் வீரர்களின் போஸ்டர்களை பஞ்சாப் ரசிகர்கள் எரித்தனர்.
அமிர்தசரஸ்,

உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி  நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த விரக்தியில் வீரர்களின் போஸ்டர்களை, பஞ்சாப் ரசிகர்கள் எரித்தனர். அமிர்தசரஸில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி  போஸ்டர்களை கொளுத்தினர்.

இந்தியாவின் தோல்வி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறும் போது :-

"இந்திய ரசிகர்களுக்கு ஒரு செய்தி என்னிடம் உள்ளது. உங்கள் அணி மிகவும் சிறப்பாக விளையாடியது மற்றும் செயல்திறனுக்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன். அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர், அவர்களால் இறுதிப்போட்டியில் நுழைய முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. தயவுசெய்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் ... உங்கள் அணியை வெறுக்காதீர்கள், உங்கள் அணியைத் தாக்கி பேச  வேண்டாம் என கூறி உள்ளார்.