கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் : கோலி, டோனிக்கு ஓய்வு ; ரோகித் சர்மா கேப்டன்? + "||" + Rohit Sharma to lead India as Virat Kohli likely to be rested for West Indies series, no clarity on Dhoni - Reports

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் : கோலி, டோனிக்கு ஓய்வு ; ரோகித் சர்மா கேப்டன்?

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் : கோலி, டோனிக்கு ஓய்வு ; ரோகித் சர்மா கேப்டன்?
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் கோலி, டோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மும்பை,

மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், டோனி தனது ஓய்வை அறிவிக்கலாம் என்ற செய்திகள் உலவி வருகிறது. டோனி இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை எனவும், அவரது வார்த்தைக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்  அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு  மூன்று 20 ஓவர் போட்டிகள் (ஆகஸ்ட் 3 முதல் 8 வரை),  ஆகஸ்ட் 8 முதல் 14 வரை  3  ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை  2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும்.

இதற்கான அணி தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் டோனிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
2. கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
3. ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்
ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
4. பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று சஞ்சய் பங்கர் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதா எம்பி கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்து உள்ளார்