இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை 2019 போட்டியின் பந்து ரூ. 1.5 லட்சத்திற்கு விற்பனை


இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை 2019 போட்டியின் பந்து ரூ. 1.5 லட்சத்திற்கு விற்பனை
x
தினத்தந்தி 12 July 2019 12:49 PM GMT (Updated: 12 July 2019 12:49 PM GMT)

இந்தியா-பாகிஸ்தான் விளையாடிய உலகக்கோப்பை 2019 போட்டியின் பந்து ரூ. 1.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது.

உலகக்கோப்பை  போட்டி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த மாதம் 16-ந் தேதி மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. இந்த போட்டியில் பயன்படுத்திய பந்து ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனையானது.

உலககோப்பையின் நினைவுச் சின்னங்களை விற்பனை செய்வதற்கான ஐ.சி.சியின் அதிகாரப்பூர்வ பங்காளியான மெமோராபிலியா பந்தை  2,150  டாலருக்கு (ரூ.1.5 லட்சம்)  விற்பனை செய்து உள்ளது.

டாஸ்போட பயன்படுத்தப்பட்ட நாணயம் மற்றும் போட்டியின் ஸ்கோர்சீட் முறையே ரூ. 99,360 மற்றும் ரூ.75,377-க்கு விற்கப்பட்டது.

இந்திய போட்டிகளுடன் தொடர்புடைய இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் 27 நினைவுகளில், இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி மோதலின் ஸ்கோட் சீட், நாணயம் மற்றும் மேட்ச் பால் ஆகியவை அடங்கும்.

Next Story