கிரிக்கெட்

உலக கோப்பை அரையிறுதி : முதல் 30 நிமிட மோசமான ஆட்டம் -ரோகித் சர்மா உருக்கம் + "||" + World Cup Cricket Bad match for the first 30 minutes Rohit Sharma

உலக கோப்பை அரையிறுதி : முதல் 30 நிமிட மோசமான ஆட்டம் -ரோகித் சர்மா உருக்கம்

உலக கோப்பை அரையிறுதி : முதல் 30 நிமிட மோசமான ஆட்டம் -ரோகித் சர்மா உருக்கம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 30 நிமிட மோசமான ஆட்டம் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறித்துவிட்டது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின்  ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன்னில் அவுட் ஆனது  ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்த உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் உட்பட 648 ரன்கள் குவித்து இதுவரை முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சதம் அடிப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்தனர். ஆனால் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து  துணைக் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில்,  ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாட தவறிவிட்டோம். முதல் 30 நிமிட மோசமான ஆட்டம், உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறித்துவிட்டது. என்னுடைய இதயம் கனமாக உள்ளது. உங்களுடைய இதயமும் அப்படிதான் இருக்கும் என நம்புகிறேன். தாய்நாட்டை கடந்து எங்களுக்கு  அளவுகடந்த ஆதரவு கிடைத்தது பெருமிதமாக இருந்தது. நாங்கள் விளையாடும் இடமெல்லாம் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என ரோகித் சர்மா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக, கேப்டன் விராட் கோலியும் 45 நிமிட மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: சதம் அடித்தார் ரோகித் சர்மா
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார்.
2. இந்திய வீரர் ரோகித் சர்மா காயம்
இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
3. 2019-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தியது யார்? : ரோகித் சர்மா, லபுஸ்சேன், கம்மின்ஸ் ஆதிக்கம்
கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது யார்? சறுக்கியது யார்? அணிகளின் வெற்றி-தோல்வி எப்படி? உள்ளிட்ட சுவாரஸ்யமான அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
4. 400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
5. சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.