கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து–நியூசிலாந்து நேருக்கு நேர் எப்படி? + "||" + In World Cup cricket How to face England - New Zealand face to face?

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து–நியூசிலாந்து நேருக்கு நேர் எப்படி?

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து–நியூசிலாந்து நேருக்கு நேர் எப்படி?
உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்சில் நாளை (இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி) மோத உள்ளன.

லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்சில் நாளை (இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி) மோத உள்ளன.

முதல்முறையாக உலக கோப்பையை கையில் ஏந்த இவ்விரு அணிகளும் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் உலக கோப்பையில் இவர்கள் இதுவரை நேருக்கு நேர் மோதிய ஆட்டங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். உலக கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 9 முறை சந்தித்து அதில் 4–ல் இங்கிலாந்தும், 5–ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன.

1975–ம் ஆண்டு: முதலாவது உலக கோப்பையில் லீக் சுற்றில் எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது.

1979–ம் ஆண்டு: இந்த முறை அரைஇறுதியில் எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை சாய்த்தது. 60 ஓவர் கொண்ட இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்ட போது அதை எட்ட முடியாமல் போனது.

1983–ம் ஆண்டு: இந்த உலக கோப்பையில் லீக்கில் இரண்டு முறை மோதினார்கள். முதலாவது லீக் ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அடுத்த ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று போனது.

1992–ம் ஆண்டு: இதில் லீக் சுற்றில் இங்கிலாந்து எடுத்த 200 ரன்களை, நியூசிலாந்து அணி எளிதில் விரட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1996–ம் ஆண்டு: இதுவும் லீக் ஆட்டம் தான். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 239 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 228 ரன்களில் அடங்கியது. 4 கேட்ச்களை நழுவ விட்டது, இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

2007–ம் ஆண்டு: லீக் ஆட்டமான இதில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. இருப்பினும் இரு அணிகளும் சூப்பர்–8 சுற்றுக்கு முன்னேறின.

2015–ம் ஆண்டு: இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் 6 ஆட்டங்களிலும் நியூசிலாந்து வெற்றிகளை குவித்தது. இதில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தை வெறும் 123 ரன்னில் சுருட்டியதும் அடங்கும்.

2019–ம் ஆண்டு: நடப்பு உலக கோப்பை தொடரில் ஏற்கனவே லீக்கில் இவ்விரு அணிகளும் சந்தித்ததை மறந்து இருக்க முடியாது. இதில் இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவின் சதத்தின் (106 ரன்) உதவியுடன் 305 ரன்கள் குவித்ததும், அதை நெருங்க முடியாமல் நியூசிலாந்து 186 ரன்களில் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றியை தொடருமா?
இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.
3. பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: சென்னையில் நடக்கிறது
பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 438 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 438 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்றுள்ளது.