ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித்கான் நியமனம்


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித்கான் நியமனம்
x
தினத்தந்தி 12 July 2019 9:30 PM GMT (Updated: 12 July 2019 7:44 PM GMT)

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

காபுல், 

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அணியின் கேப்டனை அதிரடியாக மாற்றி உள்ளது. முன்பு 3 விதமான (20 ஓவர், ஒருநாள், டெஸ்ட்) போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு வெவ்வேறு கேப்டன் இருந்து வந்தனர். தற்போது எல்லா வடிவிலான போட்டிகளுக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ரஷித் கான் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டன் பொறுப்பை மட்டும் கவனித்தார். எல்லா வடிவிலான போட்டிகளுக்கும் துணை கேப்டனாக முன்னாள் கேப்டன் அஸ்கார் ஆப்கன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.


Next Story