கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் நிர்வாக கமிட்டி தலைவர் தகவல் + "||" + World Cup Cricket Regarding the performance of the Indian team Will be examined

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் நிர்வாக கமிட்டி தலைவர் தகவல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் நிர்வாக கமிட்டி தலைவர் தகவல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டு வெளியேறியது.

லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டு வெளியேறியது. தோல்வி கண்ட இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை வந்து சேரும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பிய பிறகு கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய், உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவி தோட்ஜ் ஆகியோர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். அப்போது உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட இருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு (2020) ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தயார்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. ‘இந்திய அணி நாடு திரும்பியதும் கேப்டன், பயிற்சியாளர், தேர்வு குழு தலைவர் ஆகியோர் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் நடைபெறும். கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...