கிரிக்கெட்

உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் டிக்கெட்டை ரூ.14 லட்சத்திற்கு விற்க முயற்சி + "||" + World Cup Final ticket Trying to sell for Rs 14 lakh

உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் டிக்கெட்டை ரூ.14 லட்சத்திற்கு விற்க முயற்சி

உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் டிக்கெட்டை ரூ.14 லட்சத்திற்கு விற்க முயற்சி
இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிஆட்டம் லண்டன் லார்ட்சில் நாளை நடக்கிறது.

லண்டன், 

இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிஆட்டம் லண்டன் லார்ட்சில் நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்ட நிலையில், இப்போது டிக்கெட் வாங்கிய சிலர் கூடுதல் விலைக்கு விற்க தீவிரம் காட்டி வருகிறார்கள். ஸ்டேடியத்தின் ‘காம்ப்டன் ஸ்டேண்ட்’ பகுதியில் உள்ள டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம். அதை ரூ.14 லட்சத்திற்கு தர தயாராக இருப்பதாகவும், தங்களிடம் இரு டிக்கெட் இருப்பதாகவும் இணையதளம் ஒன்றில் டிக்கெட்டின் இருக்கை விவரத்துடன் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டிக்கெட் மறுவிற்பனையை பொறுத்தவரை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட மையம் மூலம் மட்டுமே வாங்க வேண்டும். இல்லாவிட்டால் மைதானத்திற்குள் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.