கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி; ஸ்டீவ் வாக் புகழாரம் + "||" + Mahendra Singh Dhoni is still a great player: Steve Waugh

ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி; ஸ்டீவ் வாக் புகழாரம்

ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி; ஸ்டீவ் வாக் புகழாரம்
ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி. அவரை இன்னும் நம்புகிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனி. உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு டோனியின் ரன் அவுட்டும் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் ஓய்வு பெறக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் விவாதம்  ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், டோனியை புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், அவர் ரன் அவுட் ஆகவில்லை என்றால், அந்த போட்டியை வென்று கொடுத்திருப்பார். நீங்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக இல்லை என்றால், அவர் என்ன செய்கிறார் என்று நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்கள்.

மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். நான் இன்னும் அவரை நம்புகிறேன். இந்தியாவுக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களாக ஒரே மாதிரியாகத்தான் அவர் விளையாடுகிறார். டோனி இல்லையென்றால், போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் அனைத்துப் போட்டிகளையும் வென்று கொண்டே இருக்க முடியாது. ஒரு நாள் போட்டிகளில் சேசிங்கில் மற்றவர்களை விட, அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார்.

அந்த அரையிறுதி போட்டியில் விராட் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும்தான் அணியின் வெற்றிக்கு காரணம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
2. "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்
பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வங்காளதேச வீரரின் ட்விட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3. சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்
சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது என சோயப் அக்தர் கிண்டல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
4. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு "ஆதாரமற்றது" என்மீது புகார் கூறிய முகமது ஷாஹாப் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர அசாருதீன் கூறி உள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்
இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.