கிரிக்கெட்

டி வில்லியர்சுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கோலி, யுவராஜ் சிங் + "||" + Kohli, Yuvraj Lend Support to 'Brother' AB de Villiers After Ace Protean Batsman Clears Air on Controversy

டி வில்லியர்சுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கோலி, யுவராஜ் சிங்

டி வில்லியர்சுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கோலி, யுவராஜ் சிங்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான டி வில்லியர்சுக்கு கோலி, யுவராஜ்சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி, 

தென் ஆப்பிரிக்க  அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வந்த டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு திடீரென ஓய்வை அறிவித்தார். உலக  கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், அவரது விருப்பத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகின.

டி வில்லியர்ஸ் மீது பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்று விளக்கம் அளித்த டி வில்லியர்ஸ், “உலக கோப்பை அணியில் எனக்கு இடம் வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்தவில்லை. அணிக்கு  தேவையென்றால் விளையாட தயார் என்று தான் தெரிவித்தேன்” என விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் , டி வில்லியர்ஸின் நெருங்கிய நண்பராக அறியப்படும் விராட் கோலி, வெளியிட்டுள்ள பதிவில், ”நீங்கள் மிகுந்த நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட வீரர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு இது நடந்து விட்டது. நாங்கள் உங்களை நம்புகிறோம். உங்களுக்கு எப்பொழுதும் நானும் எனது மனைவி அனுஷ்காவும் துணை நிற்போம்” என்று கூறியுள்ளார்.

அதேபோல்,  இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் டிவில்லியர்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து யுவராஜ்சிங் தனது இன்ட்ஸ்ராகிராம் பதிவில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் நான் சந்தித்த வீரர்களில் பழகுவதற்கு நீங்கள் மிகவும் அருமையான மனிதர்.

உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் நீங்கள் இடம்பெறாததால் கோப்பையை வெல்ல துளிகூட வாய்ப்பு இல்லாமல் தான் இருந்தது. உங்களை சேர்க்காதது தென்ஆப்பிரிக்க அணிக்கு தான் இழப்பு.  உங்களுக்கு அல்ல. நீங்கள் ஜென்டில்மேன் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்” என்று தெரிவித்து இருந்தார்.