இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்


இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 8:32 PM GMT)

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே இந்திய ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி வைத்துள்ளனர்.

லண்டன், 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே இந்திய ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி வைத்துள்ளனர். ஆனால் இந்திய அணி அரைஇறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் இந்திய ரசிகர்கள் பலர் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல்–ரவுண்டர் ஜேம்ஸ் நீ‌ஷம் தனது டுவிட்டர் பதிவில், ‘அன்பான இந்திய கிரிக்கெட் ரசிகர்களே. நீங்கள் இறுதிப்போட்டியை காண விரும்பவில்லை என்றால் நீங்கள் வாங்கி வைத்து இருக்கும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை அதிகாரபூர்வமான இணையதளம் மூலம் மறுவிற்பனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். டிக்கெட்டை அதிக லாபத்துக்கு விற்கலாம் என்ற எண்ணம் ஏற்படலாம் என்பது எனக்கு தெரியும். ஆனால் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு அந்த டிக்கெட்டுகளை வாங்க வாய்ப்பு கிடைக்கும் வகையில் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story