உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லும் ரிக்கி பாண்டிங் கணிப்பு


உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லும் ரிக்கி பாண்டிங் கணிப்பு
x
தினத்தந்தி 13 July 2019 9:30 PM GMT (Updated: 13 July 2019 8:39 PM GMT)

உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக நான் கருத்து தெரிவிக்கையில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது கடினம் என்றும், அந்த அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் நினைத்தேன்.

லண்டன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன். உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக நான் கருத்து தெரிவிக்கையில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது கடினம் என்றும், அந்த அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் நினைத்தேன். தற்போதும் எனது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது சிறப்பானதாகும். முந்தைய தொடரிலும் இறுதிப்போட்டியில் ஆடி இருக்கும் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு கைகொடுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story