கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து காலிஸ் விலகல்


கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து காலிஸ் விலகல்
x
தினத்தந்தி 14 July 2019 9:30 PM GMT (Updated: 14 July 2019 8:28 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 4 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் பணியாற்றி வந்தார்.

கொல்கத்தா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 4 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து பரஸ்பர அடிப்படையில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக காலிஸ் அறிவித்துள்ளார். இதே போல் உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச்சும் விலகியுள்ளார். இதையடுத்து புதிய பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உளளனர்.

இது குறித்து காலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வீரர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் என்று 2011–ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணியுடனான எனது பயணம் சிறப்பு மிக்கது. இது புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டிய நேரமாகும். இந்த தருணத்தில் அணியின் உரிமையாளர், நிர்வாகிகள், வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


Next Story