கிரிக்கெட்

உலக கோப்பை இறுதி போட்டி; பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து + "||" + Cricket fraternity criticise boundary rule after England claim maiden World Cup title

உலக கோப்பை இறுதி போட்டி; பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து

உலக கோப்பை இறுதி போட்டி;  பவுண்டரி விதியை  ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து
உலக கோப்பை இறுதி போட்டியில் பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை என பிரபலங்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்தது.

பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்  இங்கிலாந்து அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்து 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆனது. 

பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. 

16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது. 

இங்கிலாந்து வெற்றியைக் குறைத்து சொல்வதற்கு இல்லை. ஆனால், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் விதமாக விதிமுறைகள் வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது . பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்துகளையும், ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.

பவுண்டரி கணக்கை வைத்து எப்படி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றியாளரை முடிவு செய்யலாம்? இரு அணிகளும் ஒரே ஸ்கோர் தானே எடுத்தார்கள். அதை எப்படி எடுத்தால் என்ன? இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தி இருக்கலாம் அல்லது கோப்பையை பகிர்ந்து அளித்து இருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ஐசிசி ரூல்ஸ் (ICC Rules) என்னும்ஹேஸ்டேக்தான் டாப்பில் இருக்கிறது. 

முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ட்விட்டரில், ``கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஐசிசி விதிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இன்னொரு சூப்பர் ஓவராவது கொடுத்திருக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், ``என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது பவுண்டரிகளின் எண்ணிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மிக அபத்தமாக இருக்கிறது. இது டையாகவே இருந்திருக்கலாம். இரு அணிகளுக்கும் வாழ்த்துகள். இருவருமே வெற்றியாளர்கள்தான்” என்றார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ``இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள்.

மிகச் சிறப்பான ஃபைனல்” என்றார் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப். ``இறுதியில் பவுண்டரிதான் இரு அணிகளுக்குமான வித்தியாசம். வாழ்த்துகள் இங்கிலாந்து . ஆனாலும், இதயம் இங்கிலாந்து அணியிடம்தான் செல்கிறது. இதிலிருந்து வெளிவர அதிக காலம் எடுக்கும். பவுண்டரி விதியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . தொடர்ச்சியான சூப்பர் ஓவர் இதற்கு தீர்வாகப் இருந்திருக்கலாம். ஒரு வெற்றியாளர்தான் இருக்க முடியும். எனினும், கோப்பையை பகிர்வது என்பது பவுண்டரி மூலம் தீர்மானிப்பதை விடவும் நல்ல முடிவாக இருக்கும்” என்றார்.
நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீஷம், இந்த விதியைக் சாடும் விதமாக, ``வருங்காலத்தினர் தயவு செய்து விளையாட்டைத் தேர்வு செய்யாதீர்கள். பேக்கிங் அல்லது எதுவேண்டுமானாலும் எடுங்கள். 60 வயது வரை மகிழ்ச்சியாக இருந்து செல்லுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரி, ஐசிசியின் விதியை கேலி செய்திருக்கிறார். அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: நல்ல காரியம் செய்திருக்கிறது ஐசிசி. இந்த முடிவு ஜோக். இறுதி போட்டியில் விளையாடிய இரண்டு சாம்பியன் அணிகளுக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.

கிரிக்கெட்டில் சில விதிகள் நிச்சயமாக ஒரு தீவிரமான மறுபரிசீலனை தேவை என ரோகித் சர்மா கூறி உள்ளார்.

இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்! வெற்றியாளரை தீர்மானிக்க இது ஒரு பயங்கரமான வழி என்று நான் சொல்ல வேண்டும். இந்த விதி மாற வேண்டும். என பிரட் லீ கூறி உள்ளார்.


விளையாட்டு எழுத்தாளர் ஸ்ரீநாத் கூறி உள்ளதாவது:- ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான கிரிக்கெட் விதி விவாதிக்கப்படுவதை அறிந்து கொள்ளுங்கள், அதை விளக்க நீங்கள் போராடுகிறீர்கள், யாரோ ஒருவர் கூறுகிறார், 'உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அது நடந்தால் என்ன?' இன்றைய நாள். ஒரு சூப்பர் ஓவருக்குப் பிறகு ஒரு உலகக் கோப்பை இறுதிப் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பவுண்ட்ரி எண்ணிக்கையில் ஒரு டை உடைக்கப்பட்டுள்ளது.