கிரிக்கெட்

லார்ட்ஸ் மைதானத்தில் தனது மகனின் இணையதளத்திற்கு விளம்பரம் தேட முயன்ற பெண் கைது + "||" + Mother of YouTube prankster streaks at Cricket World Cup final

லார்ட்ஸ் மைதானத்தில் தனது மகனின் இணையதளத்திற்கு விளம்பரம் தேட முயன்ற பெண் கைது

லார்ட்ஸ் மைதானத்தில் தனது மகனின் இணையதளத்திற்கு  விளம்பரம் தேட முயன்ற பெண் கைது
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தனது மகனின் இணையதளத்திற்கு விளம்பரம் தேட முயன்ற பெண்ணை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.
இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில்  உலகக் கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது.  இதில்  இங்கிலாந்து அணி  நியூசிலாந்து அணியை  வென்று கோப்பையை  வென்றது.

இந்தப் போட்டியின் போது பெண் ஒருவர்  இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட அரைகுறை ஆடையை அணிந்து மைதானத்தில் ஓட முயன்றார். அவரை தடுத்து பிடித்த மைதான காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.

கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு (vitaly uncensored) என்ற இணையதளத்தை விளம்பரப்படுத்த இதுபோன்ற சம்பவம் நடந்தது.

அப்போது  சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஆடுகளத்தை ஆக்கிரமித்த பின்னர் யூடியூப் குறும்புக்காரர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியின் காதலி கின்சி வோலன்ஸ்கி உலகளாவிய புகழ் பெற்றார்.  இந்த முறை தனது மோசமான வேலைகளைச் செய்ய தனது தாயார் எலெனா ஸ்டோரோவெட்ஸ்கியை அனுப்பி உள்ளார்.