கிரிக்கெட்

ஐசிசி உலக கோப்பை கனவு அணியில் ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா + "||" + Rohit Sharma and Jasprit Bumrah on World Cup squad ICC Release

ஐசிசி உலக கோப்பை கனவு அணியில் ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசி உலக கோப்பை கனவு அணியில் ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு ஓர் அணியை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 

இதனையடுத்து, உலக கோப்பைக்கான அணி என்ற தலைப்பில் 12 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், இந்திய அணியில் இருந்து ரோகித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  மேலும் வங்காளதேச அணியில் ஷகிப் அல்–ஹசன், ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க்,  இங்கிலாந்து அணியில் ஜெசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும்,  நியூசிலாந்து  அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் பெர்குசன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.  இந்த அணியில் 12-ஆவது வீரராக நியூசிலாந்து  அணியின் டிரென்ட் பவுல்ட் இடம்பெற்றுள்ளார். 

மேலும் இந்த அணிக்கு நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் கேப்டனாகவும்,  ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி  விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.